செல்போன் பேசியபடி டூ வீலரில் பயணம்: 3 பேரின் லைசென்ஸ் ரத்து

செல்போன் பேசியபடி டூ வீலரில் பயணம்: 3 பேரின் லைசென்ஸ் ரத்து
X

நாமக்கல் அருகே போக்குவரத்து அலுவலர்கள் வானக சோதனையில் ஈடுபட்டனர்.

நாமக்கல்லில் செல்போன் பேசியபடி டூ வீலரில் பயணம் செய்த 3 பேரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதை தடுக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் கடந்த 2 நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்தல், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தல் போன்ற விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டு, 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த கனரக வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சப்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன. இந்த சோதனையின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சரவணன், சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது