மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி 150 அரசு பள்ளி மாணவியர் பங்கேற்பு

மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி    150 அரசு பள்ளி மாணவியர் பங்கேற்பு
X

பைல் படம் 

நாமக்கல்லில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 150 அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

நாமக்கல்,

நாமக்கல்லில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 150 அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட சிஇஓ மகேஸ்வரி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், மாவட்டம் முழுவதும் இருந்து, 150 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவியர், 150 படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரியஒளியில் மின்சாரம் தயாரித்தல், ஐ.சி.யு., வார்டில் உள்ளவரின் நிலையை அறியும் கருவி, இயற்கை உணவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் படைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அறிவியல் கண்காட்சியை, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் நேரில் பார்வையிட்டு ரசித்தனர். அவற்றில், சிறப்பு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசு ரூ. 3,000, 2ஆம் பரிசு ரூ. 2,000, 3 ஆம் பரிசு, ரூ. 1,000 வீதம் வழங்கப்பட உள்ளது.

Next Story