நாமக்கல் மாவட்டத்தில் இன்று 325 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
பைல் படம்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 306 நிலையான முகாம்களும், 19 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் கொரோன தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கெரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெறும். மொத்தம் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படும்.
முகாமில் 210 டாக்டர்கள், 430 நர்சுகள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 ஆசிரியர்கள், 415 பயிற்சி நர்சுகள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 4,420 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu