போலீஸ் எஸ்.ஐ போட்டித்தேர்வு : நாமக்கல் வேலை வாயப்பு மையத்தில் இலவச பயிற்சி

பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் போலீஸ் எஸ்.ஐ போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 16ம் தேதி துவக்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித்தேர்வக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (டிஎன்எஸ்யுஆர்பி) நடத்தப்பட உள்ள போலீஸ் எஸ்ஐ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், வருகிற 16ம் தேதி மதியம் 2.30 மணிக்கு துவங்கப்பட உள்ளது. எழுத்துத் தேர்வு முடிந்தவுடன் உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவர்கள், 2021-&2022 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் 24 பேரும், போலீஸ் எஸ்.ஐ தேர்வில் 5 பேரும், 2022&-2023 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில், போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் 17 பேரும், எஸ்ஐ தேர்வில் 5 பேரும், 2023&-2024 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் 22 பேரும்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விவரத்தினை 04286- 222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது ஆன்லைன்கிளாஸ்என்கேஎல்அட்ஜிமெயின்.காம் என்ற இ&மெயில் மூலமாகாவோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்புகொண்டோ தங்களின் தொலைபேசிஎண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டுவரவேண்டும் என ªதிரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu