புதுச்சத்திரம் அருகே கோயில் உண்டியல் உடைப்பு: பணம், பொருட்கள் திருட்டு

புதுச்சத்திரம் அருகே கோயில் உண்டியல் உடைப்பு: பணம், பொருட்கள் திருட்டு
X

கோப்பு படம் 

புதுச்சத்திரம் அருகே கோயில் உண்டியல் உடைத்து, பணம், பொருட்கள் திருட்டு போனது குறித்து விசாரணை நடக்கிறது.

புதுச்சத்திரம் அருகே, கல்யாணி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சம்பவத்தன்று இரவு பூஜைகள் முடிந்து, பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். அடுத்த நாள் காலை, வழக்கம்போல் கோயிலுக்கு வந்த பூசாரி, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் கோயிலுக்குள் இருந்த பொருட்கள் உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
future of ai video