தேசிய விளையாட்டுப் போட்டிக்கான தேர்வு போட்டிகள் வரும் 9ம் தேதி துவக்கம்
பைல் படம்.
தேசிய விளையாட்டுப் போட்டிக்கான தேர்வு போட்டிகள் துவங்குவது குறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொ) சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2021 -ஆம் ஆண்டின் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான (1.1.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த) கேலோ இந்தியா இளையோர் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 5.2.2022 முதல் 14.2.2022 வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ளது.
அதற்கான மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி, கால்பந்து, ஹாக்கி தேர்வு போட்டிகள் வருகிற 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார் அட்டை, பிறப்பு சான்று, பள்ளிப்படிப்பு சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்களை எடுத்துச் சென்று தேர்வு போட்டியில் கலந்து கொள்ளலாம்.
பெண்களுக்கான ஹாக்கி போட்டிகள், சென்னை, எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் வருகிற 9ம் தேதி நடைபெறும். பெண்கள் கால்பந்து போட்டிகள், சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வருகிற 9,10 தேதிகளில் நடைபெறும். ஆண்கள், பெண்கள் கபாடி போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு ஸ்டேடியத்தில் வருகிற 14ம் தேதி நடைபெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu