நாமக்கல் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 5,021 பேர் பயன்

நாமக்கல் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 5,021 பேர் பயன்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 22ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், ஒரே நாளில் 5,021 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற, 21 மெகா கொரரோனா தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 22-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 490 மையங்களில் நடைபெற்றது.

அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!