வேலை உறுதி அளிப்புத்திட்ட நிலுவைத்தொகை ரூ. 4 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் : பார்லியில் எம்.பி., ராஜேஷ்குமார் கோரிக்கை

ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார்.
நாமக்கல்,
டில்லியில் நடைபெற்று வரும் பார்லி. கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் நடைபெற்ற ஜீரோ அவர்ஸ் விவாதத்தில், திமுக ராஜ்யசபா எம்.பி., நாமக்கல் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:
தவமிழகத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 91 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 86 சதவீத வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சுமார் 29 சதவீதம் எஸ்சி, எஸ்டி தொழிலாளர்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள இந்த திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் சம்பள நிலுவைத் தொகையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் செய்வதால், தமிழ்நாடு கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி, கடந்த 4,5 மாதங்களாக, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், தமிழக தொழிலாளர்களுக்கு சம்பளமாக ரு. 4,034 கோடி மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. காலதாமதத்தால் இத்திட்டத்தை நம்பியுள்ள, லட்சக்கணக்கான ஏழை கிராமப்புற குடும்பங்களுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே, மத்திய நிதி அமைச்சரை சந்தித்து, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி ஒரு மனு வழங்கியுள்ளார். முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நிதியை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால், இந்த முதன்மைத் திட்டத்தை செயல்படுத்துவதும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு நிலுவைத்துதொகையை வழங்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொழிலாளர் பட்ஜெட்டை திருத்தி அதிகரிக்கவும், கிராமப்புற தொழிலாளர்களுக்கு நிலையான வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu