/* */

நாளை முதல் கோடை விடுமுறை துவக்கம்: மாணவ, மாணவிகள் உற்சாகம்

1 முதல் 9ம் வகுப்பு வரை நாளை முதல், ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாளை முதல் கோடை விடுமுறை துவக்கம்: மாணவ, மாணவிகள் உற்சாகம்
X

பைல் படம்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு கடந்த 6ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு கடந்த 10ம் தேதியும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டு இறுதித் தேர்வுகள் கடந்த 5ம் தேதி துவங்கியது. கடைசி நாளான இன்று உடற்கல்வி தேர்வு நடந்தது. ஒன்று முதல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மே 14 முதல், ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 24ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக், சி.பி.எஸ்.சி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,371 பள்ளிகள் உள்ளன. இன்று மாலை, தேர்வு முடித்து வெளியே வந்த மாணவ, மாணவிர் உற்சாகமாக, ஒருவர் மீது ஒருவர் சட்டையில் இங்க் அடித்துக் கொண்டும், வண்ண சாயம் பூசியும் மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஜாலியாக வீட்டுக்கு திரும்பினார்கள். கோடை விடுமுறையில் விருப்பப்படும் மாணவர்கள், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம் என, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  2. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  4. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  5. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  7. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  9. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  10. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்