நாமக்கல்லில் கோடைகால காலப்பயிற்சி முகாம் நிறைவு: 5 பேர் மாநில பயிற்சிக்கு தேர்வு

நாமக்கல்லில் நடைபெற்ற கோடைகால பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல்,
தமிழக அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் ஜவகர் சிறுவர் மன்றம், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் நுண்கலை திறன்களை வெளிக்கொனரும் வøயில், ஆண்டு தோறும் மே 1 முதல் 10 வரை, கோடை கால கலைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 25ம் ஆண்டாக, நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கலை பயிற்சி முகாம் கடந்த 1ம் தேதி துவங்கியது. அதில், பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியம், கைவினை, யோகா, சிலம்பம், கராத்தே போன்ற நுண்கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில், சிறப்பாக பங்கேற்கும் குழந்தைகளை தேர்வு செய்து, மாநில, தேசிய அளவிலான கலைப் பயிற்சி முகாமிற்கு, அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
முகாம் நிறைவு விழா நேற்று கோட்டை துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது. ஜவகர் சிறுவர் மன்ற கிராமிய நடன ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் சக்திவேல், மனவளக் கலை மன்ற பேராசிரியர் உழவன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
முகாமியில், மாணவ, மாணவியர் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், பரத நாட்டியம், கிராமிய நடனம், கராத்தே, சிலம்பம், யோகா, தப்பாட்டம், புலியாட்டம், கருப்பு சாமி ஆட்டம் ஆகியவற்றை மாணவர்கள் வெளிப்படுத்தி, தங்களது திறமைகளை நிரூபித்தனர். தற்காப்பு கலை ஆசிரியர் ராமசந்திரன், ஓவிய ஆசிரியர் வெங்கடேசன், பரதநாட்டிய ஆசிரியர் தேவயாணி உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில், சிறப்பாக பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி, தேர்வு செய்யப்பட்ட 5 பேர், வரும் 12 முதல் 19 வரை ஏற்காட்டில் நடக்கும் மாநில கலை பயிற்சி முகாமில் பங்கேற்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu