மாவட்ட விளையாட்டுத் திடலில் கோடை கால நீச்சல் பயிற்சி : விண்ணப்பங்கள் வரவேற்பு

பைல் படம்
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப். 1 முதல், மாவட்ட விளையாட்டுப் பயிற்சித்திடலில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். நீச்சல் பயிற்சி 12 நாட்களுக்கு கட்டணம் ரூ. 1,416 ஆகும். இத்தொகையினை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின்கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 1 முதல் 13 வரை முதற்கட்டமாகவும், ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 27 வரை 2 ஆவது கட்டமாகவும், ஏப்ரல் 29 முதல் மே 11 வரை 3 ஆவது கட்டமாகவும், மே 13 முதல் மே 25 வரை 4 ஆவது கட்டமாகவும் மற்றும் மே 27 முதல் ஜூன் 8 வரை 5 ஆவது கட்டமாகவும் நீச்சல் பயிற்சித் திட்டம் நடைபெறும். தினசரி நீச்சல் பயிற்சி நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை, 7 மணி முதல் 8 மணி வரை, 8 மணி முதல் 9 மணி வரை 3 பிரிவுகளாக நடைபெறும். மாலையில் 4 மணி முதல் 5 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரை 2 பிரிவுகளாக நடைபெறும். இது குறித்து மேலும் விபரம் வேண்டுவோர் 82203 10446 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், நீச்சல் தெரிந்தவர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1 மணி நேரத்திற்கு 1 நபருக்கு ரூ.59 செலுத்தி நீச்சல் பயிற்சி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu