பேளுக்குறிச்சியில் மளிகை கடையில் திடீர் தீ விபத்து

பேளுக்குறிச்சியில் மளிகை கடையில் திடீர் தீ விபத்து
X

பேளுக்குறிச்சி மளிகை கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.

பேளுக்குறிச்சியில் மளிகை கடையில் திடீர் தீ விபத்து, ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்.

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பேளுக்குறிச்சிசியில் பழனியப்பர் கோவிலுக்கு செல்லும் பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் (40). இவர் பேளுக்குறிச்சி கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அடுத்து நாள் காலை கோபால கிருஷ்ணனின் கடைக்குள் இருந்து புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த, அவர் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார்.

மேலும் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!