/* */

மாநில அளவிலான கபாடி போட்டி: ஜேடர்பாளையம், குன்னிபாளையம் அணி சாதனை

மாநில அளவிலான கபாடி போட்டியில், பெண்கள் பிரிவில் ஜேடர்பாளையம் அணியும், ஆண்கள் பிரிவில் குன்னிபாளையம் அணியும் முதல் பரிசு பெற்றன.

HIGHLIGHTS

மாநில அளவிலான கபாடி போட்டி: ஜேடர்பாளையம், குன்னிபாளையம் அணி சாதனை
X

மாநில அளவிலான கபாடி போட்டியில், பெண்கள் பிரிவில் ஜேடர்பாளையம் அணியும், ஆண்கள் பிரிவில் குன்னிபாளையம் அணியும் முதல் பரிசு பெற்றன.

மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேலப்பேட்டபாளையத்தில், எம்.கே.சதீஷ் பிரதர்ஸ் மற்றும் நண்பர்கள் குழு சார்பில், 14ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கபாடி போட்டிகள், 3 நாட்கள் நடைபெற்றது. போட்டி துவக்க விழாவிற்கு கணேசன் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் நவலடி, சண்முகம், மணப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்களுக்கான கபடி போட்டியில், நாமக்கல், கரூர், சென்னை, புதுக்கோட்டை, திருவாரூர், கோவை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 அணிகள் பங்கேற்றன. அதில், ஜேடர்பாளையம் பல்லவன் அணி, முதல் பரிசும், திருவண்ணாமலை அணி இரண்டாம் பரிசும், மோகனூர் காந்தமலை கபாடி சங்கம்3ம் பரிசும், கோவை ரத்தினம் கல்லூரி அணி 4ம் பரிசும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, முறையே 15 ஆயிரம், 12 ஆயிரத்து 500, 10 ஆயிரம், 8,000 ரூபாய் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

ஆண்களுக்கான போட்டியில், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 45 அணிகள் கலந்து கொண்டன. அதில், குன்னிப்பாளையம் கண்ணீர் துளி முதல் பரிசும், கரூர் செவ்வந்திபாளையம் எவரெஸ்ட் அணி 2ம் பரிசும், மேலப்பேட்டபாளையம் சதீஸ் பிரதர்ஸ் அணி 3ம் பரிசு, கரூர் கமலா ஸ்போர்ட்ஸ் சங்கம் 4ம் பரிசும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, முறையே, ரூ. 20 ஆயிரம், 17 ஆயிரத்து 500, 15 ஆயிரம், 12 ஆயிரத்து 500 வீதம் ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

Updated On: 18 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?