பாச்சல் தனியார் கல்லூரியில் 15ம் தேதி சிறப்பு கல்விக்கடன் முகாம் : ஆட்சியர்

Special Educational Loan Camp பாச்சல் ஞானமணி கல்லூரியில் வருகிற 15ம் தேதி, மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

பாச்சல் தனியார் கல்லூரியில் 15ம் தேதி  சிறப்பு கல்விக்கடன் முகாம் : ஆட்சியர்
X

Special Educational Loan Camp

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி), இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம், அனைத்து வங்கிகளின் சார்பில் வரும் வரும் 15ம் தேதி காலை 9 மணி அளவில், பாச்சல் ஞானமணி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே நாமக்கல் பாவை கல்லூரி, ஞானமணி கல்லூரி, திருசெங்கோடு விவேகானந்தர் கல்லூரி, கேஎஸ்ஆர் கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக்கடன் விண்ணப்பங்களில் தகுதியான மாணவர்களுக்கு ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்படும். மேலும் முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக கல்விக்கடன் பெற விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்துகொண்டு தங்கள் விண்ணப்பங்களை www.vidyalakshmi.com என்ற வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளலாம். பான்கார்டு இல்லாத மாணவர்கள் ஆதார் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் எடுத்து வந்தால் முகாம் நடைபெறும் இடத்திலேயே இ-சேவை மையம் மூலமாக பான்கார்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி, கடன் தொடர்பான வங்கி உதவி மைய சேவை வசதிகளும், இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடியாக கல்வி கடன் அனுமதி வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Feb 2024 12:30 PM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  இயற்கை வழிகளில் யூரிக் அமில அளவைக் குறைப்பது எப்படி?
 2. திருப்பூர் மாநகர்
  மார்ச் 1ல், திருப்பூரில் நிட்டெக் -2024 பின்னலாடை இயந்திரக் கண்காட்சி
 3. இந்தியா
  வாரணாசியில் பிரதமர் மோடி இன்று என்ன செய்யப்போகிறார்?
 4. காஞ்சிபுரம்
  அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்த காஞ்சிபுரம் வருவாய்...
 5. திருவள்ளூர்
  கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி கே.வாசன்...
 6. இந்தியா
  மாலத்தீவு பகுதியில் சீன உளவு கப்பல். ஆராய்ச்சி கப்பல் என்கிறது சீனா
 7. திருச்செந்தூர்
  கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி...
 8. இந்தியா
  மைத்தி இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த உத்தரவு: திரும்பப்...
 9. இந்தியா
  சாலை விபத்தில் உயிரிழந்த தெலுங்கானா எம்எல்ஏ லாஸ்யா நந்திதா
 10. இந்தியா
  நாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் இன்று ஆலோசனை