நாமக்கல்லில் இன்று மாற்றுத்திறன் குழந்தைகளை அளவீடு செய்யும் முகாம்
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கு வர இயலாமல் அதிக அளவில் இயலாமையுடைய சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள், இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வியை முழுமையாக பெறும் வகையில் கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்தவும், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவ, மாணவியர்களுக்கு உள்ளடக்கிய கல்வி வசதி மூலமாக வழங்கப்படும். இதற்காக சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
நாமக்கல் வட்டாரத்தை சேர்ந்த, பிறந்தது முதல், 18 வயதிலான குழந்தைகளின் மாற்றுத்திறன் தன்மையை அளவீடு செய்ய நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று 22ம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்படும் என கண்டறியப்படும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பயிற்சிகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு இயன்முறை சிகிச்சை மூலம் இயல்பு நிலைக்கு திரும்ப பயிற்சிகளும் அளிக்கப்படும்.
எனவே அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு உள்ள குறைபாடுகளை முழுமையாக கண்டறிந்து கொண்டு, அவர்கள் இயல்பான குழந்தைகளாக மாற்றவும், கல்வி கற்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu