பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள    ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
X

வேலகவுண்டம்பட்டியில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த பயிற்சி முகாமில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை, நாமக்கல் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட வனத்துறை உதவியுடன் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள, ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வேலகவுண்டம்பட்டி கொங்கு நாடு பி.எட் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் சிறப்பு விருந்தினரா கலந்துகொண்டு பேசினார். அப்போது, காலநிலை மாற்றத்தால் கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து கொண்டே வருகிறது, இதற்கு முக்கிய காரணம் கடல் வாழ் பாசிகளின் இனப்பெருக்கம் பிளாஸ்டிக் பொருட்களால் தடை செய்யப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதோடு மாணவர்களும் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். மேலும் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய காலி நிலங்களில் மியாவாக்கி காடுகள் ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவன நிர்வாகிகள் ராஜா மற்றும் சிங்காரவேலு, பி.எட் கல்லூரி முதல்வர் சாந்தி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சாரதா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிஞர் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர்கள் வெஸ்லி, சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story