நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு பயிற்றுனருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு பயிற்றுனருக்கு    திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
X

பைல் படம் 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான, சிறப்பு பயிற்றுனர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், மாவட்ட திட்ட அலுவலகத்தில், 2 நாட்கள் நடந்தது.

நாமக்கல்,

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். அப்போது, மாற்று திறனாளி குழந்தைகளை கணக்கெடுத்தல், கையாளுதல், எளிய முறையில் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொள்ளுதல் குறித்து விளக்கி கூறினார்.

உதவி திட்ட அலுவலர் குமார் முன்னிலை வகித்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான, 21 வகைப்பாடுகள் பற்றி விளக்கி கூறினார். முகாமில், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தன்மைகள், ஆட்டிசம் குழந்தைகளை கையாளும் விதம், குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை கையாளுதல் மற்றும் அவர்களுக்கான கற்பித்தல் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சிறப்பாசிரியர்கள் ஆனந்தகுமார், பெரியசாமி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதி செய்திருந்தார்.

Next Story