தடையை மீறி இறைச்சி கழிவு கொட்டிய கடை உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம்

பைல் படம்.
நாமக்கல் - சேந்தமங்கலம் ரோட்டில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அதே ரோட்டில் நகராட்சி மின் மயானமும் இயங்கி வருகிறத. நாமக்கல்லில் சேந்தமங்கலம் வழியாக கொல்லிமலைக்கும், ராசிபுரம், சேலத்திற்கும் செல்லும் முக்கிய ரோடாக இந்த ரோடு உள்ளது. இந்த நிலையில் சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள கொசவம்பட்டி ஏரியைச் சுற்றி பல்வேறு இறைச்சிக் கடைக்காரர்கள் கோழிக் கழிவுகளை கொண்டுவந்து கொட்டிச் செல்வது வாடிக்கையாக இருந்தது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனால் சிரமத்திற்குள்ளாகி வந்த மக்கள் இப்பகுதியில் கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதையும் நகராட்சி நிர்வாகத்தினர் சுத்தம் செய்தனர்.
மேலும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோரை கண்காணிக்க துப்புரவு அலுவலர் சுகவனம் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் அப்பகுதியில் சம்பவத்தன்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதற்காக டூ வீலரில் வந்த, இறைச்சிக் கடை ஊழியர்களை அதிகாரி கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட கோõழிக்கடை உரிமையாளருக்கு நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் உத்தரவின்படி, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிப்பதுடன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu