பொதுவினியோகத்திற்கு தனித்துறை தேவை: ரேசன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில், ரேசன் கடை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Ration Shop Latest News - ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தண்டபானி போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநில செயலாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு, பொதுவினியோகத் திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கடந்த பல மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய, 31 சதவீத அகவிலைப்படியை ரேசன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து ரேசன் கடைகளுக்கும் புதிய 4 ஜி விற்பனை கருவி மற்றும், 4 ஜி சிம் கார்டு வழங்க வேண்டும். சரியான எடையில், தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும். மாத இறுதி நாளில் சம்பளம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu