சேந்தமங்கலம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அணியில் ஐக்கியம்
சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன், தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.
சேந்தமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன், தனது கோஷ்டியைச் சேர்ந்த சுமார் 200 பேருடன் அதிமுக ஓபிஎஸ் அணியில் ஐக்கியமானார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மலைவாழ் மக்களுக்கான சட்டசபை தொகுதியில், ஒரு முறை திமுகவிலும், மற்றொரு முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சந்திரசேகரன். அவர் ஏற்கனவே கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் பணியாற்றினர். கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இவருக்கும், மாவட்ட அதிமுக செயலாளர் தங்கமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிமுக போட்டி வேட்பாளராக சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர் எந்த கட்சியிலும் சேராமல் ஒதுங்கியிருந்தார்.
தற்போது அவர் தனது ஆதரவளார்களுடன் சென்னை சென்று முன்னாள் துணை முதல்வர், ஓபிஎஸ்சை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது ஆதரவாளரான மாவட்ட ஊராட்சிக்குழு 9வது வார்டு திமுக கவுன்சிலர் சிவப்பிரகாசம், தற்போதைய கொல்லிமலை ஊராட்சி ஒன்றி தலைவர் மாதேஸ்வரி அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் கெங்கம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் தனுஷ்கோடி, லட்சுமி, பாலுசாமி, பாப்பாத்தி ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரனுடன் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.
மேலும், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த, திருப்புலிநாடு பஞ்சாயத்து தலைவர் செல்வராசு, அரியூர் நாடு பஞ்சாயத்து தலைவர் நாகலிங்கம், துணைத்தலைவர் சங்கீதா, சித்தூர்நாடு பஞ்சாயத்து தலைவர் செல்லமுத்து, கொல்லிமலை செம்மோடு லேம்ப் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன்,தெம்பலம் லேம்ப் கூட்டுறவு சங்க தலைவர் சின்னதுரை, கூட்டுறவு சங்க இயக்குனர்கள் தனலட்சுமி, வேலுமணி, முத்துசாமி, பன்னீர்செல்வம், சண்முகம், சிவப்பிரகாசம், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் குணசேகரன், மல்லிகா, ஈஸ்வரன் உள்ளிட்ட சுமார் 200 பேர், முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரனுடன் சென்னை சென்று முன்னாள் துணை முதல்வர் ஓ. பண்ணீர் செல்வத்தை சந்தித்து அதிமுகவில் இணைத்துக்கெண்டனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன், ஏற்கனவே திமுகவில் இருந்ததால், தற்போது மீண்டும் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்ப்டடது. தற்போது அதிமுக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஓபிஎஸ்ஐ சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தது. அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu