இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிக்கை
X

நாமக்கல்லில் நடைபெற்ற, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், கோவை மண்டலக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் பேசினார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோவை மண்டலக்கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்துணைத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் தங்கவேல், கோவை மாவட்ட அமைப்பாளர் சுவாமி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத்தலைவர் ரவி, நாமக்கல் மாவட்டச் செயலாளர் சங்கர் வரவேற்றார். மாநில இலக்கிய அணி அமைப்பாளர் தர்மராசு, துணை அமைப்பாளர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் முருகசெல்வராசன் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான சம்பளம் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியருக்கு வழங்க வேண்டும். நிதி மோசடித் திட்டமான புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்திட வேண்டும். தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தொடர்ந்து வழங்க வேண்டும். கல்விப்பணி அல்லாத பிற பணிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிப்பதை கைவிடல் வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!