நாமக்கல் கோட்டை முனியப்ப சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

நாமக்கல் கோட்டை முனியப்ப சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
X

ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் கோட்டை முனியப்ப சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் கோட்டை முனியப்ப சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் கோட்டை ரோட்டில், மலைக்கோட்டை நுழைவு வாயில் அருகில் பிரசித்திபெற்ற கோட்டை முனியப்ப சாமி திருக்கோயில் உள்ளது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும், ஆடிமாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைய முன்னிட்டு முனியப்ப சாமிக்கு நல்லெண்ணை, பால், பன்னீர், திருமஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோட்டை முனியப்ப சாமிக்கு கிடா மற்றும் கோழி வெட்டி படையல் ö சய்து வழிபட்டனர். கோயில் பூசாரி மோகன் பூஜைகளை நடத்தினார்.

Tags

Next Story