மணல் அள்ள அனுமதி அளிக்க மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை
கோப்பு படம்
இது குறித்து, பரமத்திவேலூர் அருகில் உள்ள, நன்செய் இடையாறு உழவர் மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்கத்தினர் நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் நன்செய்இடையார் கிராமத்தில் மணல் அள்ளுவதற்கு கடந்த 2020 முதல் 2 ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறை மூலம் அனுமதி கொடுக்கப்பட்டது. எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மணல் குவாரி ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மாட்டு வண்டி மற்றும் மாடுகளையும் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கோத்தான்குடியில் மாட்டுவண்டி மணல் குவாரி செயல்படுகிறது. மேலும், திருச்சி மாவட்டம் மாதாவரம், சாலக்குடி ஆகிய இடங்களிலும் காவிரில ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. நன்செய் இடையாறு கிராமத்தில் மட்டும் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
உடனடியாக மாட்டு வண்டி மணல் குவாரிக்கு அனுமதி அளிக்காவிட்டால், வரும் வரும் 24ம் தேதி காவிரி ஆற்றில் குவாரிக்கு, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடுவோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu