ஊரக வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு அழைப்பு

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.
Rural Development Job Opportunities - இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணியிழந்த, முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. எனவே பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள், தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள், தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள பிடிஓக்களை நேரடியாக தொடர்பு கொண்டு ஏற்கனவே பணிபுரிந்த விவரத்துடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட பிடிஓ அலுவலகத்தில் வருகிற 13ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் விருப்ப கடிதமும் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட பிடிஓ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu