ரோட்டரி சங்கம் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் உபகரணங்கள் வழங்கல்

ரோட்டரி சங்கம் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் உபகரணங்கள் வழங்கல்
X

நாமக்கல் ரோட்டரி சங்கங்கள் சார்பில், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரனங்களை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் மெகராஜ், எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர்.

நாமக்கல் ரோட்டரிசங்கங்கள் சார்பில், அரசு மருத்துவமனைக்கு, ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் நாமக்கல் பகுதியில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கின.

நாமக்கல் மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மருத்துவ உபகரனங்களை மருத்துவத்துறை இணை இயக்குனர் சித்ராவிடம் வழங்கினார்.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், ரோட்டரி மாவட்ட கவர்னர் சுந்தரலிங்கம், முன்னாள் கவர்னர் எக்ஸெல் நடேசன், கவர்னர் (தேர்வு) சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கங்களின் சார்பில் 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், மாஸ்க்குகள், சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம், அரசு டாக்டர் ரங்கநாதன் மற்றும் திரளான ரோட்டரி சங்க பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!