கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை  அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Revenue Department Staffs Agitation தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Revenue Department Staffs Agitation

துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசு உத்தரவை வெளியிட வேண்டும். இளைநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில், விதி திருத்த உத்தரவை வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்பாடுத்தப்பட்ட சம்பளம், சிறப்பு சம்பளம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகாவிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கு என, புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்படவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், 3 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக, நாமக்கல்லில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், நிர்வாகிகள் ஸ்ரீதர், கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய செயற்குழு உறுப்பினர் ராணி துவக்கி வைத்து, கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார். அதில், வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பேராõட்ட அறிவிப்பின்படி, வரும் 22ம் தேதி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம், வரும் 27ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Tags

Next Story