நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஜகவில் ஐக்கியம்

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஜகவில் ஐக்கியம்
X

ஓய்வுபெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

BJP News Today - நாமக்கல்லைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஜகவில் இணைந்தார்.

BJP News Today - நாமக்கல்லைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன், ஓய்வுபெற்ற போலீஸ் ஏடிஎஸ்பி. இவரது மனைவி ஜெயந்தி, இவர் நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் துறையில் பல்வேறு பிரிவுகளில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இவர் கடந்த நகராட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தற்போது ஜெயந்தி அவரது மகன் சக்சஸ் சபரிநாதன் ஆகியோர் பாஜக மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலையில் பாஜவில் இணைந்தார். பாஜ வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் காந்தி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவுமாநிலச் செயலாளர் துரைராஜ், மீனவ பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் லோகிதாஸ் ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!