மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப பொறியாளர் சங்கம் கோரிக்கை

நாமக்கல்லில் நடைபெற்ற, தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க, மாநில பொதுக்குழு கூட்டத்தில், அதன் தலைவர் அந்தோணி படோவராஜ் பேசினார்.
TN Electricity Board Jobs -தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் 54-வது மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் அந்தோணி படோவராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாநில மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிடக்கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா பரவல் மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட கடுமையான சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றிய மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை பட்டய பொறியாளர்களைக் கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கு தடையற்ற, தரமான மின்சாரத்தை தொடர்ந்து வழங்கிட, தளவாட பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை, அனைத்து வாரிய பணியாளர்களுக்கும் செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் பொருளாளர் கார்த்திக்கேயன், கரூர் மண்டல செயலாளர் ஆனந்த்பாபு மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu