நாமக்கல்லில் குடியரசு தின விழா: தேசியக்கொடி ஏற்றி வைத்தார் கலெக்டர்

நாமக்கல்லில் குடியரசு தின விழா: தேசியக்கொடி ஏற்றி வைத்தார் கலெக்டர்
X

நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்,  கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.

நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தனார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து புறாக்களையும், வண்ண பலூன்களையும் அவர் பறக்க விட்டார்.

பின்னர், அணிவகுப்பினை சிறப்பாக நடத்திய போலீசாருக்கு கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய 44 போலீசாருக்கு தமிழக முதல்வரின் பதககங்களையும், 27 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 108 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் வருடாந்திர பராமரிப்பு மானியத்தொகையாக தலா ரூ.25,000-க்கான காசோலையை 3 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கினார். மாவட்டத்தில், கொடிநாள் வசூலில் ரூ.3 லட்சத்திற்கும் மேல் வசூல் புரிந்தமைக்காக 4 அலுவலர்களுக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், கொடிநாள் வசூலில் அதிக நிதி வசூல் செய்த 55 அரசு அலுவலர்களுக்கு, கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். கொரோனா கட்டுப்பாட்டால் வழக்கமாக, குடியரசு தினவிழாவில் நடைபெறும், தியாகிகள் கவுரவிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!