நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில்    நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
X
Ration card grievance redressal camp tomorrow at 8 places in Namakkal district

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்மூலம் பெயர் சேர்த்தல், பெயர்நீக்கல், பெயர்திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ், அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம், நாளை 8ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சிவில் சப்ளைஸ் தாசில்தார்கள் தலைமையில் இந்த முகாம் நடைபெறும்.

பொதுமக்கள் முகாம்களில் கலந்துகொண்டு ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், செல்போன் எண் மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றை மனு அளித்து தீர்வு செய்துகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

Next Story