ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்த என்.புதுப்பட்டி சாலை அமைக்கும் பணி

ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்த என்.புதுப்பட்டி சாலை அமைக்கும் பணி
X

என் புதுப்பட்டியில் சாலை அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்.

ராஜேஷ்குமார் எம்.பி. என்.புதுப்பட்டியில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிழக்கு ஒன்றியம், என்.புதுப்பட்டி பஞ்சாயத்து மேலராஜ வீதியில் இருந்து, நாமக்கல் ரோடு வரை புதிய தார் சாலை அமைக்க, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.09 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதையொட்டி புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. ராஜேஷ்குமார் எம்.பி நிகழ்ச்சியில் கலந்துகெண்டு ரோடு அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.

மோகனூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவலடி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பூவராகவன், பஞ்சாயத்து தலைவர் கவிதா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வேலுபாலாஜி, ராமசாமி, இனியவன், கிருபாகரன், நல்லதம்பி, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!