நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் செல்வதற்காக, புதிய பேட்டரி வாகனத்தை கலெக்டர் உமா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாமக்கல்,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீஸில் மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 705 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், விடுதியில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, கலை திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு மற்றும் தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 8 பேருக்கு காதொலி கருவிகள், கண்பார்வையற்றோர் பயில்வதற்கான நவீன கருவி, தாங்கு கட்டைகள், முழங்கை ஊன்றுகோல் என, 22,441 ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்கள், ஒருவருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை வழங்கப்பட்டது.
மேலும், தமிழ் வளர்ச்சித்துறை, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம் சார்பில், தமிழ் அகராதியியல் நாள் விழாவில், 2024ம் ஆண்டிற்கான தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற, திருச்செங்கோட்தை சேர்ந்த கவிஞர் வினோத் சுந்தராசுவுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ரூ. 6.83 லட்சம் மதிப்பில், பேட்டரி வாகனத்தை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu