தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
X

தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு நாமக்கல் உழவர் சந்தையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு நாமக்கல் உழவர் சந்தையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

மத்திய அரசால் தேசிய திசு மற்றும் உடல் உறுப்பு மாற்று அமைப்பு (நோட்டோ) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் இந்தியாவில் உடல் உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 23ம் தேதி இந்த தினம் கடைபிடிக்கப்பட்டது. கடந்த 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி இந்தியாவில் முதல் இருதய மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த ஆண்டு முதல் தேசிய உடல் உறுப்பு தான தினம் ஆக. 3ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு நேற்று நாமக்கல் உழவர் சந்தைக்கு வருகை தந்த, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரகுகுமரன் மேற்பார்வையில் மருத்துவம் மற்றும் நர்சிங் படிப்பு மானவர்கள் மற்றும் ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள் இனைந்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Tags

Next Story
ai in business transformation