நாமக்கல் ஈமு நிறுவனத்தில் பறிமுதல் செய்த வீட்டுமனைகள் வரும் 15ல் பொது ஏலம்
பைல் படம்.
நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில், நாமக்கல்லைச் சேர்ந்த செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மென்ட்ஸ் ஆகிய ஈமு நிறுவனத்தின் பேரில், முதலீட்டார்கள் கொடுத்த புகார்களின் மீது வழக்குப் பதிவு செய்து, கோவை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் சட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் அசையா சொத்துக்கள், நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் தாலுக்கா, பிள்ளைகளத்தூர் கிராமத்தில், 2,360 சதுரடி கொண்ட இரண்டு வீட்டுமனைகள் (தலா ரூ. 11 லட்சம் ரூபாய்). ராசிபுரம் தாலுக்கா, காட்டூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் 3,716.25 சதுரடி கொண்ட (மதிப்பு ரூ. 25 லட்சம் ரூபாய்) ஒரு வீட்டு மனையும் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டு மனைகள் வரும், 15ம் தேதி காலை 10.30 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.
ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், 15ம் தேதி காலை 10 மணிக்குள், திரும்பத்தரக்கூடிய டெபாசிட் தொகையாக ஒவ்வொரு வீட்டுமனைக்கும், அடிப்படை ஏலத்தொகையில் 10 சதவீதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிமாண்ட் டிராப்ட்டாக பெற்று டிஆர்ஓவிடம் ஒப்படைத்து, ஏலத்தில்கலந்துகொள்ளலாம்.இத்தகவலை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu