கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்,
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் விவசாயசங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய முன்னேறக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைலமை வகித்தார். கள்இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி முன்னிலை வகித்தார். நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி, நாம் தமிழர் கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் அரவிந்த், ஈரோடு சீத்தாலட்சுமி, பாஜ மத்திய அரசு திட்டங்களின் மாநில துணைத் தலைவர் லோகேந்திரன், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் பொறுப்பாளர் வேலுச்சாமி, சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், சிபிஐ ரவீந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.
தமிழகத்தில் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும், மோகனூர் தாலுகா பகுதியில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ. 23 கோடியை உடனடியாக வழங்கவேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு 4 மாதமாக வழங்காமல் உள்ள லிட்டருக்கு ரூ. 3 ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள். திரளான விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் விவசாய முன்னேற்றக் கழகத்தின் விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu