இராசிபுரத்தில் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பைல் படம்.
Latest Suicide News - நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் அண்ணா சாலையை சேர்ந்தவர் பூபதி, அவரது மனைவி பேபி ராணி (47). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூபதி இறந்துவிட்டார். இந்த தம்பதியின் மகள் ரீனு (17). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாண்டு டிப்ளமோ படித்து வந்தார்.
தந்தை இறந்ததால் கல்லூரி மாணவி ரீனு மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவரது தாய் பேபி ராணிக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். இதனால் ரீனு மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய பேபிராணி, வீட்டின் கதவை தட்டியபோது, திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பேபி ராணி ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது ரீனு படுக்கை அறையில் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேபி ராணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரீனுவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். செல்லும் வழியில் ரீனு உயிரிழந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu