நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்
X
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய ஒரு நாள் கொரோனாதொற்று பாதிப்பு 601 பேர்: மொத்த பாதிப்பு 63,951 பேர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 601 பேர். மொத்தம் பாதிப்பு 63,951 பேர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பரமத்திவேலூர், கொமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 601 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் நாமக்கல், சேலம், பள்ளிபாளையம், ஈரோடு, கொமாரபாளயைம், ராசிபுரம், பெருந்துறை, கோவை, கரூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63,951 ஆக உயர்ந்துள்ளது. இன்று 431பேர் சிகிச்சை குனமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 58,486 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 4,940- பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 525 ஆக உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil