நாமக்கல்லில் ஜூலை 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
X
By - P.Nathan, Reporter |13 July 2021 6:25 PM IST
நாமக்கல்லில் ஜூலை 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் குறித்த விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணைமின் நிலையத்தில் ஜூலை 15ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மோகனூர் ரோடு, கொண்டிசெட்டிபட்டி, ஹவுசிங் போர்டு, முல்லை நகர், திருச்சி ரோடு, நளா ஹோட்டல், அசோக் நகர், சாமி நகர், கந்தசாமி கண்டர் பள்ளி ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu