இராசிபுரம், காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில் மின் நிறுத்த அறிவிப்பு

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

இராசிபுரம் பகுதிகளில் நாளை 19ம் தேதி, காளப்பநாய்க்கன்பட்டியில் 20ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் மற்றும் காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில் நாளை 19ம் தேதிமின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இராசிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், நாளை 19ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார விநியோம் தடை செய்யப்படும்.

இதனால் ராசிபுரம் நகரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசம்பாளையம், வேலாம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டிப்புதூர், குருசாமிபாளயைம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 20ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 20ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!