காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் 25ம் தேதி மின்தடை
X
பைல் படம்.
By - P.Nathan, Reporter |23 Nov 2021 5:45 PM IST
காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வருகிற 25ம் தேதி மின்சாரத்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 25ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிலமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu