வில்லிபாளையம் மற்றும் மோகனூர் பகுதியில் மின்சார நிறுத்தம் அறிவிப்பு

வில்லிபாளையம் மற்றும் மோகனூர் பகுதியில் மின்சார நிறுத்தம் அறிவிப்பு

பைல் படம் : வில்லிபாளையம் மற்றும் மோகனூர் பகுதியில் மின்சார நிறுத்தம் அறிவிப்பு

வில்லிபாளையம் பகுதியில் நாளை 11ம் தேதி மற்றும் மோகனூர் பகுதியில் 12ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

வில்லிபாளையம் பகுதியில் நாளை 11ம் தேதி மற்றும் மோகனூர் பகுதியில் 12ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பரமத்திவேலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பரமத்திவேலூர் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு மாதமுமம், துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை 11ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாய்க்கன்பட்டி, சுங்கக்காரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பாளையம், தம்மங்காலிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கிழக்கடை, கஜேந்திரா நகர், சுண்டக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை 11ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகனூர்:

வாழவந்தி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இதனால் மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலைப்பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளயைம், ஆரியூர், நன்செய்இடையார், ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்ன கரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் 12ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story