வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு

நாளை நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேர்வு செய்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நாளை 19ம் தேதி தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கான எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாளை வாக்குப்பதிவு நாளன்றும், 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்றும், மாவட்டத்திலுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார்.
மேலும், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களை கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் கலெக்டர் தேர்வு செய்தார். இன்று தேர்தல் அலுவலர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டு, அவர்கள் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்வார்கள். நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu