போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

போலியோ சொட்டு மருந்து முகாமை  அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்
X
நாமக்கல் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் மதிவேந்தன்  தொடங்கி வைத்தார்.
நாமக்கல்லில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

நாமக்கல்லில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

இந்தியாவில் போலியோ நோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும், போலியோ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக, இதுவரை போலியோவால் யாரும் பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக போலியா பாதிப்பு ஏதும் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24 ஆண்டுகளில் ஒருவர் கூட போலியோவால் பாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று 27ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் முகாமில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1,052 முகாம்களும், நகராட்சி பகுதியில் 150 முகாம்களும் என மொத்தம் 1202 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் அரசு மற்றும் சேவை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 4,927 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேலும் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா தியேட்டர்கள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 52 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 22 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார். நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.எல்.ஏ.க்கள் நாமக்கல் ராமலிங்கம்,சேந்தமங்கலம் பொன்னுசாமி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் அலுவலர் சாந்தாஅருள்மொழி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!