பரமத்திவேலூரில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க் வழங்கி போலீசார் கொரோனா விழிப்புணர்வு

பரமத்திவேலூரில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க் வழங்கி போலீசார் கொரோனா விழிப்புணர்வு
X
பரமத்திவேலூரில் மாஸ்க் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு போலீசார் மாஸ்க் வழங்கி கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், ப.வேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாஸ்க் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு, போலீசார் இலவச மாஸ்க் வழங்கி, நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.

முன்னதாக போலீசார் சுற்றுப்புறத்தூய்மை குறித்து அறிவுரை வழங்கினார்கள். மேலும் அருகிலுள்ள டீ கடைகள் ஓட்டல் கடைகள் ஆகியவற்றிற்கு சென்ற போலீசார், மாஸ்க் அணியாமல் வரும் நபர்களை கடையில் அனுமதிக்காதீர்கள், முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே கடையில் அனுமதிக்க வேண்டும். அதை மீறினால் கடைக்காரர்கள் பற்றும் மாஸ்க் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story