போதுப்பட்டி மக்கள் நலவாழ்வு மையம் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு

போதுப்பட்டி மக்கள் நலவாழ்வு மையம்    நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு
X

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட போதுப்பட்டியில் செயல்பட்டு வரும் மக்கள் நலவாழ்வு மையத்தை, கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட போதுப்பட்டியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட போதுப்பட்டியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட போதுப்பட்டி மக்கள் நலவாழ்வு மையத்தை கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நலவாழ்வு மையத்தில் தினசரி வரும் புறநோயாளிகள் எண்ணிக்கை, நோயாளிகள் வருகை விபரம், சிகிக்சை அளிக்கப்படும் விபரம், நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் போன்றவற்றை பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களின் பதிவுகள், மகப்பேறு சிகிச்சை விபரம் மற்றும் தடுப்பூசிகள் விபரம் குறித்தும் கேட்டறிந்தார். மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும், பாராமரிக்கப்படும் முறை, மருந்து பொருட்களின் காலாவதியாகும் காலம் ஆகியவை குறித்தும், மருத்துவ பணியார்கள் விபரம், வருகை பதிவேடு, ஆய்வக பதிவேடுகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தங்களது பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என டாக்டர் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Next Story