நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு
X

பைல் படம். 

நாமக்கல் அருகே நடைபெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

நாமக்கல் -மோகனூர் ரோட்டில் உள்ள லத்துவாடியைச் சேர்ந்தவர் சின்னுசாமி. இவரது மகன் ஹரிஷ் (17). நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தருண்குமார் என்ற அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தருண்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அங்குள்ள கோழிப் பண்ணை பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிளில் திடீரென நிலைதடுமாறி ரோட்டோரம் இருந்த பாலத்தில் மோதியது.

இதனால் ஏற்பட்ட விபத்தில், தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தருண்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்எஸ்ஐ தமிழழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!