பரமத்தி அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பரமத்தி அருகே கோதூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கோதூர் மாரியம்மன் கோவில் திடலில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜனனியை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு உள்ளிட்ட தமிழக முதல்வர் கலந்துகொண்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளின் படங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. திரளான பொதுமக்கள் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu