நாமக்கல் மாவட்டத்தில் 13ம் கட்ட தடுப்பூசி முகாம்: ஒரே நாளில் 34,071 பேருக்கு தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் 13ம் கட்ட தடுப்பூசி முகாம்: ஒரே நாளில் 34,071 பேருக்கு தடுப்பூசி
X

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.நாட்டாமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 13ம் கட்ட தடுப்பூசி முகாம், ஒரே நாளில் 34,071 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 13-ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 34,071 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற 12 மெகா தடுப்பூசி முகாம்களில், 4,74,471 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 13-ஆம் கட்டமாக அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 472 முகாம்கள், 41 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 513 முகாம்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இம்முகாம் பணிகளில் 210 டாக்டர்கள், 845 நர்சுகள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள், 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணி முதல் மாலை 7மணிவரை நடைபெற்ற முகாமில், மொத்தம் 34,071 பேருக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!