பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: நாமக்கல்லில் இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: நாமக்கல்லில் இன்றைய விலை நிலவரம்
X
நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு சமமாக, மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை கம்பெனிகள் கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கொரோன ஊரடங்கு காலத்திலும், முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும் எண்ணை கம்பெனிகள் தவறாமல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர். இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நாமக்கல் பகுதியில் இன்றைய விலை விபரம்:

டீசல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.102.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.106.06 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ. 109.61 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!