பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாமக்கல்லில் இன்றைய விலை விபரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாமக்கல்லில் இன்றைய விலை விபரம்
X
நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு சமமாக, மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை கம்பெனிகள் கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கொரோன ஊரடங்கு காலத்திலும், முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும் எண்ணை கம்பெனிகள் தவறாமல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தினசரி டீசல் விலை உயர்வால் லாரிகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய முடியாமல் சரக்குப் போக்குவரத்து தொழில் மிகவும் நெருக்கடியில் உள்ளது. டூ வீலர் மற்றும் கார் உபயோகிக்கும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இன்றைய விலை நிலவரம்:

டீசல் விலை ஒரு லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.101.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.105.15 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ. 108.70 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai future project